Personal Site

My photo

அன்பு நண்பர்களுக்கும் பொதுமக்களுக்கும் வணக்கம்..

புதிதாக இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளேன். இத்தளம் வழியாக புதிய நண்பர்களையும் பொதுமக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

 

ஏராளமான பாவனைகளை கொண்டது நம் சமூகம். பாவனைகள் வழியாகவே நாம் பலவற்றை அடைந்திருக்கிறோம் அல்லது அடைந்திருப்பதாக கற்பனை செய்துகொள்கிறோம். ஆனால் எதார்த்தங்களோ பாவனைகளுக்கு அப்பால் மிதந்துகொண்டிருக்கின்றன. "When a man reaches a certain age, there are many things he can feign; happiness is not one of them; என்கிறார் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய படைப்பாளியான ஜார்ஜ் லூயிஸ் போர்ஹஸ். போர்ஹஸைப் போலவே நானும் மனநிறைவை கற்பனைகள் வழியாகவோ பாவனைகள் வாழியாகவோ அடையமுடியாது என்றே நம்புகிறேன். நம் இருப்பை அர்த்தப்படுத்திக்கொள்ள மனநிறைவு தேவை. மனநிறைவை அடைய செயல்கள் தேவை. செயல்களுக்கு மேன்மையான அர்த்தம் தேவை. மேன்மையான அர்த்தங்களுக்கு மேன்மையான லட்சியங்கள் தேவை. மேன்மையான லட்சியங்களை நான் என் தந்தையிடம் தான் கண்டடைந்தேன்.

 

ஒரு தகப்பனாகவும் ஒரு படைப்பாளியாகவும் என்னை மிகவும் பாதித்த மனிதர் அவர். அவருடைய படைப்புகள் முழுவதும் எளிய மனிதர்களே நிறைந்திருந்தார்கள். சாமானி்யர்களிடமும் ஓடுக்கப்பட்ட மனிதர்களிடமும் அவர் கொண்ட நேசம் நெகிழ்ச்சி தரதக்கது. கழுத்தை நெறிக்கும் பிரச்சனைகளோடு அலையும் அம்மனிதர்களுக்கு குறைந்த பட்ச ஆசுவாசம் சமூகவிடுதலையிலும் சமூகநீதியிலும் தான் அடங்கியுள்ளது என்பது அவருடைய தரிசனம். அவருடைய லட்சியத்தின் கற்பனையின் உன்னத வடிவம் தான் என் காவல்துறை பணி.

 

ஏற்றதாழ்வுகள் மலிந்த ஒரு சமூகத்தில் சமூக நீதிக்கான தேவை என்றும் இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு களப்பணியாளராக; ஒரு காவல்துறை அதிகாரியாக; ஒரு எளிய பிரஜையாக, சமூக நீதிக்கான போரட்டங்களில் ஜனநாயகத்திற்கு உட்பட்ட; சாத்தியப்பட்ட வழிகளியெல்லாம் தொடர்ந்து என்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறேன். கடந்த முப்பத்திநாலு வருட என் காவல்துறை பணியைக்கூட அவ்வாறே தான் நான் நம்புகிறேன் அல்லது அவ்வாறாக அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.

 

எரியும் பிரச்சனைகளோடு ஒரு எளிய பிரஜை வெளியில் காத்துகொண்டிருக்கிறான் என்ற பிரக்ஞை எனக்கு என்றும் உண்டு. அவனை சென்று அடைவதற்கான மற்றொரு பாதை எனத்தான் இணையத்தையும் நம்புகிறேன். ஒரு சாமானிய மனிதனுக்கு நீதிகிடைக்க அல்லது உதவிபுரிய இத்தளம் பயன்படுமேயானால் நான் உவகை கொள்வேன்.

 

எண்ணங்களையும் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

 

emergencyஅவசரத் தொடர்புக்கு..

  • குற்றம் : 100
  • போக்குவரத்து : 103
  • குழந்தைகள் தொடர்பான குற்றம் : 1098
  • பெண்கள் மீதான வன்முறை மற்றும் குற்றம் : 1091
  • முதியோர் மற்றும் மூத்த குடிமக்கள் மீதான வன்முறை மற்றும் குற்றம் : 1253
  • அந்தரங்க ஆலோசனைகளுக்கு : 044- 42103535
 

Perceptionகண்ணோட்டம்...

 

இப்பகுதியில் படைப்பாக்கம் குறைந்த சமூக தேவைகள் மற்றும் கருத்துக்கள் நிறைந்த துறைச்சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதலாம் என்று உத்தேசித்துள்ளேன். அவை இங்கு இடம்பெறும்.

 

தீதும் நன்றும் பிறர் தர வாரா

 

61-வது சுதந்திர தின விழா எல்லா மாநிலங்களிலும் விமரிசையாகவும் அசம்பாவிதம் எதுவுமின்றி கொண்டாபட்டது.  சுதந்திர தினம் என்றாலே எல்லோருக்கும் அந்நாளில்   ஏற்பாடு  செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தான் நினைவுக்கு வரும். ஒரு லட்சம் போலீசார் குவிப்பு,  டிக்..டிக்..டிக்..  சுதந்திர தினம் நெருங்கிறது...

 

 

மேலும் ......

 

 

 

பரண்பரண்...

 

சமீப காலமாக சிறைச்சாலைகள் குறித்த உலகத் திரைப்படங்களைப் பார்த்துவருகிறேன். அவற்றைக் குறித்த என் எண்ணங்கள் இங்கு பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன்.

 

பாத்ஸ் ஆப் கிளோரி் [Paths of Glory]

 

ஸ்டேன்லீ குப்ரிக்கின் புகழ்பெற்ற இத்திரைப்படத்தை சமீபத்தில் தான் கண்டு கழித்தேன். கடும் அலுவலகளுக்கு இடையிலும் மிகுந்த தாக்கத்தை உருவாக்கியது இத்திரைப்படம். யுத்த பின்புலமும் யுத்த கைதிகளை அதிகாரிகள் கையாழும் விதமும் அதிகாரத்தை தக்க வைத்துகொள்வதற்கு மனிதர்கள் நிகழுத்தும் குரூரமும் இத்திரைப்படத்தைத் திரைக்காவியமாக மாற்றிவிடுகிறது. இத்திரைப்படத்தைப் பற்றி வரும் நாட்களில் விரிவான எழுத உத்தேசித்துள்ளேன்.

nat

eventsநிகழ்ச்சிகள்

 

நான் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை இங்கு பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன்.

 

பொது நிகழ்ச்சிகள் தொடர்பாக நண்பர்களும் பொதுமக்களும் என்னை அணுகவும் தொடர்புகொள்ளவும் மேற்குறிப்பட்ட தகவல்கள் உதவியாக இருக்கும்.